Last Updated : 16 Jan, 2015 12:07 PM

 

Published : 16 Jan 2015 12:07 PM
Last Updated : 16 Jan 2015 12:07 PM

ஆட்குறைப்பு செய்ய கோக கோலா முடிவு

கோக கோலா இந்தியா நிறு வனம் இந்தியாவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. உலகளாவிய சந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப மறுவடிவமைப்பு நட வடிக்கையில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்றும், அதன் ஒரு பகுதியாக இந்த ஆட்குறைப்பு நட வடிக்கை என்றும் கோக கோலா கூறியுள்ளது. இதன் மூலம் சந்தையில் கோக கோலாவின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.

கோக கோலா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் இதை குறிப்பிட்டுள்ளது. பல ஆண்டுகளான உற்பத்தி முயற்சியை மேலும் எளிமையாக்கவும், உலக அளவிலான வளர்ச்சிக்கு ஏற்ப நிறுவனத்தை ஒழுங்குபடுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்று இந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த மறுவடிவமைப்பு நடவடிக்கைகள் உலக அளவிலான வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது முன்னரே ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த ஆட்குறைப்புக்கு நடவடிக்கையில் வேலையிழப்பை சமன்படுத்தும் விதமாக முயற்சி கள் செய்யப்படும் என்று குறிப்பிட் டுள்ளார்.

கோக கோலா இந்தியா நிறு வனத்தில் சுமார் 250 பணியாளர்கள் வரை பணியாற்றுகின்றனர். தவிர இந்த நிறுவனத்தின் பாட்டிலிங் நிறுவனங்களில் சுமார் 15 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

கோக கோலா நிறுவனம் உலக அளவில் 1,600 முதல் 1,800 வேலை வாய்ப்புகளை அடுத்த மாதத்திலிருந்து குறைக்க திட்டமிட்டுள்ளது. தங்களது செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதை மேற்கொள்ளப் படுவதாக நிறுவனம் தெரிவித்துள் ளது. தற்போது கோக கோலா நிறுவனத்தில் உலக அளவில் 1,30,000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் செலவு குறைப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பை கோக கோலா வெளியிட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x