Published : 24 Jan 2015 08:43 AM
Last Updated : 24 Jan 2015 08:43 AM

இணையதளம் நம்மில் ஓர் அங்கமாகிவிடும்: கூகுள் தலைவர் கணிப்பு

இன்று உலக மக்களை இணைக்கும் மிக முக்கியமான அமைப்பாக விளங்கும் இணையதளம் வெகு விரைவில் நம்மிடையே ஒரு அங்கமாக மாறிவிடும் என்று கூகுள் நிறுவனத் தலைவர் எரிக் ஷ்மிட் கூறினார்.

டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பேசு கையில் அவர் இக்கருத்தைத் தெரி வித்தார். அவர் மேலும் கூறியது:

இப்போது உங்களைச் சுற்றி பல விதமான சென்சார்கள், மின்னணு கருவிகள் உள்ளன. அத்தகைய கருவிகள் உள்ளன என்பதே உங்களால் உணர முடியாத நிலையில் அவை உங்களைச் சுற்றி உள்ளன. அதைப் போல இணையதளமும் மாறிவிடும்.

உங்களது வாழ்வின் ஒரு அங்கமாக அவை மாறிவிட்டன. இத்தகைய அறையில் கருவி களுடன்தான் நீங்கள் பேச வேண்டும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அனைத்து செயல்களுக்கும் பின்புலமாக இணையதளம் இருக்கும் என்றார்.

தொழில்நுட்பம் வளர வளர வேலையிழப்பு அதிகரித்து வரு கிறது என மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலான நிறுவன தலை மைச் செயல் அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய ஷ்மிட், ஒவ்வொரு தொழில் நுட்பமும் 5 முதல் 7 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதாக அவர் கூறினார். இந்த விகிதம் அந்தந்த நாடுகளின் பொருளாதார நிலைக்கு ஏற்ப மாறுபடும் என்று சுட்டிக் காட்டினார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒரே ஒரு டிஜிட்டல் சந்தை வாய்ப்புதான் உள்ளது. 40 கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை ஐரோப் பிய நாடுகளில் உருவாக்க முடியும். இங்குதான் அதிக எண்ணிக் கையில் வேலையில்லாத் திண்டாட் டம் நிலவுவதாக அவர் கூறினார்.

தொழில்நுட்பம் வேலை வாய்ப்பை பறிக்கிறதா என்ற விவாதத்தில் கலந்து கொண்ட அவர், விரைவான மாற்றத் தில் எத்தகைய விளைவுகள் உரு வாகும் என்று கேள்வியெழுப்பி னார். டிராக்டர் வந்தபோது பல விவசாயிகள் வேலையிழந்தனர் என்பதை மறுக்க முடியாது ஆனால் சர்வதேச சமூகம் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது என்பதை மறுப்பதற்கில்லை என் றார். இந்த பொருளாதார மாநாட்டில் முக்கியமான விவாதமே பழங்களுக்கு சர்வ தேச அளவில் வளர்ச்சி எந்த அள வுக்கு இருக்கும் என்பதுதான். தொழில்நுட்பத்துறையினர் மிகச் சிறந்த இணைப்பை அளிப்பதன் மூலம் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முடியும் என்று குறிப் பிட்டார்.

தொழில்நுட்பம் சீராக பரவி யுள்ளதா? என்று கேள்வியெழுப்பி யதற்கு, இந்தப் பிரச்சினைக்கு ஒருங்கிணைந்து தீர்வு காண வேண்டும் என்று மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா கூறினார்.

தொழில்நுட்பத்தை நம்பும் தொழில்நுட்பவியலாளர்கள் நம்பிக்கையுடன்தான் எதையும் பார்க்க வேண்டும். இது மனிதர்களின் நகரம், இங்கு மிகப் பெரிய செயல்களைச் செய்ய உதவு வதுதான் தொழில்நுட்பம் என்று நாதெள்ளா குறிப்பிட்டார். ஒரு காலத்தில் இணையம் என் பது முகவரி இல்லாத ஒன்றாக இருந்தது. இப்போது அனை வருமே அனைத்தையுமே இதில் பகிர்ந்து கொள்கின்றனர் என்று ஃபேஸ்புக் தலைவர் சாண்ட்பெர்க் குறிப்பிட்டார்.

இப்போது அனைவரது குரலுக்குமே மதிப்பு உள்ளது. அனைவரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்கின்றனர். ஆனால் முன்பெல்லாம் மக்கள் குரலுக்கு மதிப்பே இருந்ததில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.

தொழில்நுட்பம் அனைத்து வழி களையும் திறந்து விடத் தூண்டு கிறது என்று குறிப்பிட்ட அவர் இதற்கு வட கொரியாவும் விதி விலக்கல்ல என்று ஷ்மிட் குறிப் பிட்டார். மக்களுக்காக தகவல் தொடர்பு ஊடகங்களை திறந்து விட வேண்டி கட்டாயம் அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களுக்கு அரசு வங்கிச் சேவை, தொலைத் தொடர்பு உள் ளிட்ட அடிப்படை வசதிகளை உரு வாக்குவதோடு அவர்கள் தொடர்பு கொள்வதற்கான வசதியையும் ஏற் படுத்தித் தர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது என்று குறிப் பிட்டார். தகவல் பரவல் உலகில் இனி எந்த ஒரு நாடும் தனித்திருப்பது சாத்தியமில்லை என்றார். இப்போது ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப மாற்றம் என்பது பனி மலையின் ஒரு சிறு முனை அளவே என்று சாண்ட்பெர்க் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x