

மோரிஸ் மைனர். இது பழைய காலத்து கார். அதன் வடிவம்தான் என்னை ஈர்க்கக் காரணம். பழைய பொருட்களைச் சேர்க்கும் ஆண்டிக் கலெக்ஷன் பிரியன், நான். அது என்னவோ கருப்பு வெள்ளை காலத்து விஷயம் என்றால் மட்டும் மனதிற்குள் ஒரு கிளாசிக் காதல் பூக்கிறது.
இப்போதும் என் அலுவலகத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஓவியங்களை சேகரித்து அலங்கரித்து வருகிறேன். அதேபோலத்தான் என் அடுத்த இலக்கு மோரிஸ் மைனர் மாதிரியான கார்களின் அணிவகுப்பு. இந்த பகிர்வின் வழியே ஒரு விண்ணப்பமும் வைக்கிறேன். யாரிடமாவது ‘மோரிஸ் மைனர்’ மாதிரியான பழைய கார் இருந்தால் அதை நான் வாங்கிக்கொள்கிறேன். அதற்குப் பரிசாக இருவரும் சேர்ந்து ‘ ஆந்திரா மீல்ஸ்’ சாப்பிடுவோம்….ப்ரோ.