Published : 06 Jan 2015 11:26 AM
Last Updated : 06 Jan 2015 11:26 AM

எல் அண்ட் டி ரூ. 4,000 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்

எல் அண்ட் டி நிறுவனம் ரூ. 4,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. இந்தியா மற்றும் சர்வதேச அளவில் இந்த ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. ஒடிசா கோல் நிறுவனத்துக்கு 48 கிலோ மீட்டர் தூரத்துக்கான ரயில்பாதை அமைப்பதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

முன்னணி கட்டுமான நிறுவ னமான எல் அண்ட் டி பல்வேறு தொழில்துறைகளில் 2014 டிசம்பர் மாதத்தில் பெற்றுள்ள ஒப்பந் தங்கள் குறித்த செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

போக்குவரத்துக் கட்டமைப்பு துறையில் ரூ.2,053 கோடிக்கான ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. ஒடிசா நிலக்கரி நிறுவனத்துக்கு 48 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ரயில் பாதை தவிர கட்டடங்கள், நீர்மின் நிலையத்துக்கான குழாய் இணைப்புகளும் அடங்கும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்காக என்ஹெச் 218ல் பிஜப்பூர்-குல்பர்கா- ஹோம் னாபாத் சாலையில் கர்நாடகா மாநிலத்தில் சாலைகளை மேம்படுத்த உள்ளது. ரூ.440 கோடி மதிப்பில் சர்வதேச அளவிலான திட்டங்களுக்கும் ஒப்பந்தம் பெற் றுள்ளது. தண்ணீர் மற்றும் மாற்று எரிசக்தி திட்டங்களில் ரூ.729 கோடி ஒப்பந்தங்களை பெற்றுள்ளது என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

ஓமனில் ஷலாலா பிரி ஸோன் நிறுவனத்துக்கு கட்டு மான ஒப்பந்தமும், சவுதி அரேபியாவில் புரய்தா மற்றும் ஆரீஸ் பகுதிகளில் மின் மேம்பாடு பணிக்கான ஒப்பந்தங்களையும் வாங்கியுள்ளது. சட்டீஷ்கர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சோலார் மின்சக்தி மேம்படுத்துதல், உள்ளிட்ட பல ஒப்பந்தங்களையும் மின்பாதை மற்றும் மின் விநியோக துறையில் ரூ. 668 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்திய பவர் கிரைட் கார்ப்பரேஷனுக்காக வட பிராந்திய வேலைகளுக்கான ஆர்டர்களையும் பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் கட்டுமான துறையின் அடிமட்ட வேலைகள் மேற்கொள்வது வரை எங்களது ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள வாய்ப் பாக கருதுகிறோம் என்று குறிப் பிட்டுள்ளார் இதன் இயக்குநர் குழு உறுப்பினராக எஸ்.என். சுப்ரமண்யன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x