

ஸ்விஸ் மத்திய வங்கியின் நடவடிக்கையால் சர்வதேச அளவில் பிற நாடுகளின் கரன்சிகளின் மாற்று விகிதத்தில் பெரும் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக யூரோவின் மாற்று விகிதத்தில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.
ஸ்விஸ் மத்திய வங்கி கடந்த வியாழக்கிழமை யூரோவுக்கு நிகரான ஸ்விஸ் பிராங்க் மாற்று மதிப்பை நிலைத் தன்மையிலிருந்து விலக்கிக் கொள்ளப் போவதாக அறிவித்தது. இதனால் சந்தை நிலவரத்துக்கேற்ப யூரோவின் மதிப்பு நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. யூரோவுக்கு மாற்று மதிப்பாக 1.2 ஸ்விஸ் பிராங்க் என்ற நிலையான தன்மை பல ஆண்டுகளாக பின் பற்றப்பட்டது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் ஸ்திரமற்ற பொருளாதார நிலைமை மற்றும் யூனியனிலிருந்து கிரீஸ் வெளியேறும் சூழல் ஆகியவற்றால் கூடுதலாக கரன்சிகளை (யூரோ) அச்சடிக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுள்ளது.
நிலையான கரன்சி மாற்று மதிப்பை இனிமேலும் தொடர முடி யாது என்ற நிலைக்கு ஸ்விஸ் அரசு வந்தது. யூரோவுக்கு நிகராக ஸ்விஸ் பிராங்க் அச்சடித்தால் அது அந்நாட்டில் பெரும் பண வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே யூரோவுக்கு நிகராக ஸ்விஸ் பிராங்க் மாற்று மதிப்பு நிலைத் தன்மையை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே யூரோவின் மதிப்பு 0.8 பிராங்குக்கு உயர்ந்தது. பிறகு சற்று நேரத்தில் 1.5 பிராங்காக சரிந்தது. இருப்பினும் ஸ்திரமற்ற நிலையே நிலவுகிறது.
பாதிப்பு
இந்த முடிவால் நிலையான கரன்சி மூலம் (பிராங்க்) கடன் பத்திரங்கள், பரிவர்த்தனைகள் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். பிராங்க் மூலம் கடன் பெற்றுள்ள தொழி லதிபர்களுக்கும் இது பெரும் பாதிப்பாக அமையும்.