தொடர் ஏற்றத்துக்கு பிறகு பங்குச்சந்தைகள் சரிந்தது: சென்செக்ஸ் 499 புள்ளிகள் வீழ்ச்சி

தொடர் ஏற்றத்துக்கு பிறகு பங்குச்சந்தைகள் சரிந்தது: சென்செக்ஸ் 499 புள்ளிகள் வீழ்ச்சி
Updated on
1 min read

கடந்த பத்து வர்த்தக நாட்களாக ஏற்றத்தில் இருந்த சந்தை நேற்று கடுமையான சரிவை சந்தித்தது.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் வாரக் கடைசி நாளான நேற்று 499 புள்ளிகள் சரிவைக் கண்டது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 143 புள்ளிகள் சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்திய பங்குச் சந்தைகளில் நிலவி வந்த சாதகமான வர்த்தகச் சூழ்நிலை நேற்று இறக்கம் கண்டது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 9000 புள்ளிகளை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று சந்தை இறக்கத்தை சந்தித்தது.

ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா வின் காலாண்டு முடிவுகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்கின்றனர் சந்தை நிபுணர்கள். ஐசிஐசிஐ வங்கியின் நிகர வாராக்கடன் அதிகரிப்பு, மற்றும் பேங்க் ஆப் பரோடாவின் வருமானம் குறைந்தது ஆகிய காரணங்களால் இந்த இரண்டு பங்குகள் கடுமையாக சரிந்தன. ஐசிஐசிஐ பங்கு 5.2 சதவீதமும், பேங்க் ஆப் பரோடா 11 சதவீதம் சரிந்து முடிந்தன.

மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் அதிக அளவில் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில் நேற்று 1258 பங்குகள் ஏற்றத்தையும், 1609 பங்குகள் சரிவையும் கண்டன. 246 பங்குகள் விலையில் மாற்றமில்லாமல் வர்த்தகம் முடிந்துள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் டாடா பவர், பிஹெச்இஎல், என்டிபிசி, ஷேஷா ஸ்டெர்லைட், விப்ரோ பங்குகள் ஏற்றத்தை சந்தித்தன. ஐடி மற்றும் ரியாலிட்டி துறை பங்குகள் ஏற்றமாக வர்த்தகமானது. டிசம்பர் காலாண்டு முடிவுகளில் ஐடி நிறுவனங்களின் நிகர லாபம் அதிகரித்துள்ளதால் இந்த நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்குகள் 2 சதவீத ஏற்றத்தை சந்தித்துள்ளது.

ஆட்டோமொபைல், பேங்கிங், கேப்பிட்டல் கூட்ஸ், கன்ஸ்யூமர் டியூரபிள் துறை சார்ந்த பங்குகள் இறக்கம் கண்டன. வங்கி குறியீடு 3 சதவீதம் வரை சரிந்தது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.86 ரூபாயாக இருந்தது. சர்வதேச சந்தைகளிலும் நேற்றைய வர்த்தகம் ஏற்ற இறக்கமான சூழ்நிலையே இருந்தது.

இதற்கிடையே அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 1723 கோடி ரூபாய் அளவுக்கு வியாழன் அன்று முதலீடு செய்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in