Published : 24 Jan 2015 10:49 AM
Last Updated : 24 Jan 2015 10:49 AM

புதிய லோகோவுடன் டிவிஎஸ் டயர்ஸ்

டிவிஎஸ் குழும நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனம் வாகனங்களுக்கான டயர்களை உற்பத்தி செய்து வருகிறது. இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான டயர்கள் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்வதிலும் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது தனது வணிக முத்திரையை மாற்றி யுள்ளது.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள இந்த நிறுவனம் தங்களது தயாரிப்பின் வலி மையை, துடிப்பை, விரைவை உணர்த்துவதாக இந்த லோகோ இருக்க வேண்டும் என்று நினைத்தோம் என குறிப்பிட்டுள் ளது. இதற்கேற்ப தங்களது லோகோ வாக புதிதாக வடிவமைக்கப்பட்ட ஈகிள் சின்னத்தை வெளி யிட்டுள்ளது.

மேலும் டிவிஎஸ் ஸ்ரீசக்ரா என்கிற பிராண்ட் பெயரை இனிமேல் டிவிஎஸ் டயர்கள் என்று பெயர் மாற்றம் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிறுவனம் ஆண்டுக்கு 800 கோடி டாலர் வருமானம் ஈட்டுகிறது. இந்த நிறுவனத்துக்கு மதுரை மற்றும் உத்தரகாண்ட் மாநிலம் பந்த் நகரில் டயர் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. ஆண்டுக்கு 19 லட்சம் டயர்களை இந்த நிறுவன உற்பத்தி செய்கிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x