Published : 02 Jan 2015 11:18 AM
Last Updated : 02 Jan 2015 11:18 AM

ஸ்நாப் டீல்: மொபைல் மூலமாக 65 சதவீதம் ஆர்டர்

2014-ம் ஆண்டு சிறப்பாக இருந்ததாகவும், எங்களுக்கு வந்திருக்கும் ஆர்டர்களில் 65 சதவீதம் மொபைல் மூலமாக வந்திருப்பதாகவும் ஸ்நாப்டீல் நிறுவனர் குனால் பஹல் தெரிவித்திருக்கிறார்.

கடந்த வருடத்தில் நிறுவனம் 600 சதவீதம் வளர்ச்சி அடைந்ததாகவும், அதிகம் தேடப்பட்ட ஆன்லைன் இ-காமர்ஸ் இணையதளங்களில் முதல் 5 இடத்தில் ஸ்நாப்டீல் இருக்கிறது. மேலும் மொபைல் மூலமாக 65 சதவீத ஆர்டர்கள் வருகிறது. இந்திய நிறுவனங்களில் மொபைல் மூலமாக அதிக ஆர்டர்கள் வருவது ஸ்நாப்டீலுக்கு என்று குனால் தெரிவித்தார். வெளிச்சந்தையில் என்ன வாங்க முடியுமோ அதை ஆன்லைன் மூலமாக விற்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகங்களை நாங்கள் விற்கிறோம் என்றார்.

வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் அதிகம் தேடப்படும் இ-காமர்ஸ் இணையதளங்களில் நாங்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறோம் என்று வாடிக்கையாளர்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.மேலும் 2015-ம் ஆண்டு மேலும் பல புதுமைகளை புகுத்த இருப்ப தாகவும் தெரிவித்தார்.

இப்போது 500 பிரிவுகளில் 5 லட்சம் பொருட்கள் ஸ்நாப்டீலில் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x