Published : 30 Jan 2015 11:52 AM
Last Updated : 30 Jan 2015 11:52 AM

ரேசிங் பிரியர்களுக்கான கேடிஎம் மோட்டார் சைக்கிள்

மோட்டார் சைக்கிள்களில் சாகசம் என்பது இளைஞர்களுக்கு மிகவும் விருப்பமானது. எந்த வகையான சாகசமும் அதற்குரிய இடங்களில் அதாவது மைதானங்களில் நிகழ்த்தினால் மட்டுமே ரசிக்க முடியும். மோட்டார் சைக்கிள் சாகசத்தை மக்கள் நடமாட்டமுள்ள சாலைகளில் நிகழ்த்தினால் அது வாகன ஓட்டிக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் இடைஞ்சலாக முடியும்.

இருப்பினும் ரேசிங் பிரியர்களுக்கென்ற விசேஷமான மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு வந்து கொண்டுதானிருக்கின்றன. ஐரோப்பிய மாடல் மோட்டார் சைக்கிளான கேடிஎம் இப்போது தனது விற்பனையகங்களின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்துள்ளது.

சென்னையில் அரும்பாக்கம் (கேஎல்என் ஆட்டோமொபைல்ஸ்) மற்றும் ஆயிரம் விளக்கு (கிவ்ராஜ் ஆட்டோ மொபைல்ஸ்) பகுதிகளில் விற்பனையகங்ளை ரேசிங் பிரியர்களின் வசதிக்காக திறந்துள்ளது.

கேடிஎம் நிறுவனம் ஆஸ்திரிய நிறுவனமாகும். இது பின்னாளில் நிதி நெருக்கடியால் பிரிந்து நான்கு நிறுவனமாகியது. இந்நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளை கேடிஎம் பவர் ஸ்போர்ட்ஸ் ஏஜி தயாரிக்கிறது. இந்நிறுவனத்தில் 47 சதவீத பங்குகளை பஜாஜ் நிறுவனம் வாங்கியது. இதனால் இந்நிறுவனத் தயாரிப்புகளை இந்தியச் சந்தையில் பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்கிறது.

பஜாஜ் தயாரிப்புகளை விற்பனை செய்யும் விநியோகஸ்தர்கள் கேடிஎம் ரக மோட்டார் சைக்கிளை விற்பனை செய்வதோடு விற்பனைக்குப் பிந்தைய பழுதுபார்ப்பு வசதிகளையும் செய்கின்றனர்.

இந்த விற்பனையகங்களில் கவாஸகி நிறுவனத்தின் சூப்பர் ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார் சைக்கிள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

ரேசிங் பிரியர்களை ஈர்க்கும் கேடிஎம் ஆர்சி 390, ஆர்சி 200, 390 டியூக், 200 டியூக் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுடன் கவாஸகி தயாரிப்பான நின்ஜா 300 மற்றும் நின்ஜா 650 மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இஆர்6என் மற்றும் இஸட் 250 ஆகிய ரக மோட்டார் சைக்கிளும் கிடைக்கிறது.

இவை தவிர ரேசிங் செல்வோருக்குத் தேவையான ஆடைகள், ஹெல்மெட்டுகளும் இந்த விற்பனையகங்களில் கிடைக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x