

வோடபோன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக சுனில் சூட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இங்கிலாந்தை சேர்ந்த இந்த நிறுவனத்தின் தலைவராக இப்போதுதான் ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டிருக்கிறார். சுனில் சூட் தற்போது நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக (சி.ஓ.ஓ) இருக்கிறார்.
2009-ம் ஆண்டில் இருந்து தலைமைச் செயல் அதிகாரியாக இருந்துவரும் மார்டின் பீட்டர்ஸ் வரும் ஏப்ரல் 1.-ம் தேதியுடன் பதவியில் இருந்து விலகுகிறார். மார்டின் சிறந்த தலைவராக செயல்பட்டார். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பல வகைகளில் பாடுபட்டார். சுனிலுடன் வேலை செய்ய ஆவலுடன் இருப்பதாக வோடபோன் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி விட்டோரியோ கொலாவ் தெரிவித்தார்.
மார்டின் பீட்டர் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினாலும், நிறுவ னத்தின் இயக்குநர் குழுவில் தொடர்ந்து இருப்பார் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சூட் 2000-ம் ஆண்டு ஹட்ச் நிறுவனத்தில் இணைந்தார். அதன் பிறகு ஹட்ச் நிறுவனத்தை வோடபோன் வாங்கியது.