

பிரதமர் நரேந்திர மோடியை போஸ்கோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி நோ ஓ ஜோன் நேற்று சந்தித்து பேசினார். பிரதமரின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
தென் கொரிய நிறுவனமான போஸ்கோ இந்தியாவில் மேற்கொள்ள உள்ள புதிய முதலீடுகள் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் முதலீடு செய்வது குறித்தும், ஒடிசா திட்டம் காலதாமதமாவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் தெரிவித் துள்ள போஸ்கோ அதிகாரிகள் பிரதமரின் அழைப்பின் பேரில் நோ ஓ ஜான் கலந்து கொண்டதாகவும், இந்தியாவில் முதலீடு செய்ய உள்ள திட்டங்கள் குறித்தும் குஜராத் மற்றும் மகாராஷ் டிராவில் பெரிய அளவில் மேற் கொள்ள உள்ள முதலீடுகள் குறித்தும் பேசப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஒடிசா மாநில திட்டத்தை பகிர்ந்து கொள்வது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது என்றனர். மூலப்பொருளுக்கு தேவையான இரும்புத்தாது ஒதுக்கீட்டுக்கு ஒடிசா அரசு இன்னும் ஒதுக்கீடு செய்யவில்லை என்ற அதிகாரிகள் போஸ்கோவுக்கு 2082.50 ஹெக் டேர் ஏரியா ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற விண்ணப்பித்துள்ளோம் என்றனர்.
நாங்கள் தற்போது இந்த நடைமுறையை கவனித்து வருகிறோம். அதற்கு பிறகு முறையான நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் அதிகாரிகள் கூறினர்.
முன்னதாக ஒடிசா மாநிலத்தின் இரும்புத்தாது மற்றும் சுரங்கதுறை அமைச்சர் வெளிநாட்டு முதலீட் டாளர்களுக்கு மத்திய அரசு தவறாக வழிகாட்டி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டாளர் களுக்கு மூலப்பொருட்கள் தேவைகளுக்கான முதலீடுகளை முற்றாக நிராகரிக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.