Published : 30 Jan 2015 11:22 AM
Last Updated : 30 Jan 2015 11:22 AM

இவரைத் தெரியுமா? - யூசப் ஹமீத்

$ சிப்லா நிறுவனத்தின் தலைவர். ஆராய்ச்சியாளரும் கூட. இவரது தந்தை ஆரம்பித்த நிறுவனம் சிப்லா. 1960-ம் ஆண்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் இணைந்தார்.

$ ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளை குறைந்த விலைக்கு கொண்டுவந்தவர். ஆண்டுக்கு 12,000 டாலர் செலவு ஆகும் மருந்துகளை 350 டாலர் என்ற அளவுக்கு குறைத்தவர்.

$ கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். 23 வயதில் சிப்லா நிறுவனத்தில் இணைந்தார். 1972-ம் ஆண்டு முதல் நிர்வாக இயக்குநராகவும் 1989 முதல் தலைவராகவும் இருக்கிறார்.

$ ஆப்ரிக்காவில் சிப்லா நிறுவனம்தான் கோவில், ஹமித்-தான் கடவுள் என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அஜித் டாங்கி தெரிவித்துள்ளார்.

$ இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ப பூஷண் விருது 2005-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. தவிர பல பிஸினஸ் பத்திரிகைகள் மற்றும் செய்தித் தாள்கள் இவருக்கு பல விருதுகளை வழங்கி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x