Last Updated : 27 Jan, 2015 10:30 AM

 

Published : 27 Jan 2015 10:30 AM
Last Updated : 27 Jan 2015 10:30 AM

ஸ்விஸ்: இந்தியாவுக்கு ரூ.1.2 லட்சம் கோடி தங்கம் ஏற்றுமதி

ஸ்விட்சர்லாந்திலிருந்து கடந்த ஆண்டு இந்தியாவுக்கு ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியர்கள் பெருமளவில் கருப்புப் பணத்தை ஸ்விட்சர்லாந்து வங்கியில் பதுக்கி வைத்திருப்பதாக பெருமளவு சர்ச்சை எழுந்துள்ள நிலையில் 1,710 கோடி ஸ்விஸ் பிராங்க் மதிப்பிலான தங்கம் (சுமார் ரூ.1.2 லட்சம் கோடி) இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது.

2014 நவம்பர் வரையில் இந்த அளவுக்கு தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் 290 கோடி ஸ்விஸ் பிராங்க் (சுமார் ரூ. 20 ஆயிரம் கோடி) மதிப்பிலான தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாதத்திலும் இதே அளவுக்குத் தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளாக ஸ்விட் சர்லாந்து சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 457 கிலோ தங்கம் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையான காலத்தில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்திலிருந்து தங்கம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

நவம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதி 6 மடங்கு அதிகரித் துள்ளது. அதாவது ரூ. 35 ஆயிரம் கோடி மதிப்புக்கு தங்கம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

திருமண சீசன் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரிப்பே தங்க இறக்குமதி அதிகரிப்புக்குக் காரணமாகும்.

இந்தியாவின் ஒட்டுமொத்த தங்க இறக்குமதியில் 60 சதவீதம் ஸ்விட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

ஸ்விட்சர்லாந்தில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணம் இதுபோல தங்கமாக இந்தியாவுக்கு அனுப்பப்படலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தங்கம் மற்றும் வைர வர்த்தகம் இரு நாடுகளிடையே கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஸ்விஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை இதுபோல தங்கம் மற்றும் வைரமாக பிற நாடுகளுக்கு அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஸ்விட்சர்லாந்தில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதில் இந்தியா தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x