Published : 07 Jan 2015 11:38 AM
Last Updated : 07 Jan 2015 11:38 AM

பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 855 புள்ளிகள் சரிவு

நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன. கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதிக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகள் அதிகம் சரிவது இப்போதுதான். வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 900 புள்ளி கள் வரை சரிந்து 26937 புள்ளியைத் தொட்டது.

வர்த்தகம் முடியும்போது 854 புள்ளிகள் சரிந்து 26987 புள்ளிகளில் சென்செக்ஸ் முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடு எண் நிப்டி 251 புள்ளிகள் 8127 புள்ளியில் முடி வடைந்தது. இதேபோல மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறீயிடுகள் 3 சதவீத அளவுக்கு சரிந்து முடிவடைந்தன.

கச்சா எண்ணெய் விலை ஐந்தரை வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. இதன் காரணமாக சர்வதேச வளர்ச்சி குறையும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கீரிஸ் நாட்டில் நிலவும் நிச்சய மற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களால் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பு கடந்த ஒன்பது வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. மேலும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை நாடிச்சென்றார்கள்.

ஆரம்பத்தில் 500 புள்ளிகள் அளவுக்கு சரிந்த சென்செக்ஸ் மதி யத்துக்கு பிறகு வேகமாக சரிய ஆரம்பித்தது. உள்நாட்டு நிலவரங் களும் பங்குச்சந்தை சரிய காரண மாகும். டிசம்பர் மாதத்துக்கான சேவை துறை பி.எம்.ஐ. குறியீடு 51.1 புள்ளிகளாக இருந்தது. இது கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது குறைவாகும்.

பி.எஸ்.இ.யில் இருக்கும் அனைத்து துறை குறியீடுகளும் சரிந்து முடிந்தன. எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடு அதிக பட்சமாக 4.71 சதவீதம் சரிந்தது. ரியால்டி 3.66 சதவீதமும், மெட்டல் குறியீடு 3.49 சதவீதமும், பி.எஸ்.யூ. குறியீடு 3.39 சதவீதமும் சரிந்து முடிந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் 30 பங்குகளில் ஹெச்.யூ.எல். பங்கினை தவிர மற்ற அனைத்து பங்குகளும் சரிந்து முடிந்தன. குறிப்பாக ஓ.என்.ஜி.சி., எஸ்.எஸ்.எல்.டி. டாடா ஸ்டீல், ஹெச்.டி.எப்.சி., ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தன. ஹெச்.யூ.எல். பங்கு 1.89 சதவீதம் உயர்ந்து முடிந்தது.

இதற்கிடையே திங்கள் கிழமை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 472 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்தார்கள்.

சர்வதேச நிலவரம்

ஜப்பானின் பங்குச்சந்தை குறியீடான நிக்கி 3 சதவீதம் வரை சரிந்தது. கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்த சரிவு இருந்தது. ஹேங் செங் குறியீடு 1 சதவீதம் சரிந்தது. ஐரோப்பிய சந்தைகள் சரிவான வர்த்தகத்துடன் தொடங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x