

ஹிட்டாச்சி ஹோம் அண்ட் லைஃப் சொல்யூஷன் நிறுவனப் பங்குகளை ஓஎப்எஸ் முறையில் வாங்க உள்ளது ஜான்சன் கண்ட்ரோல் நிறுவனம். ஹிட்டாச்சி நிறுவனத்தின் 25.74 சதவீத பங்குகளை ரூ.575 கோடிக்கு வாங்க ஜான்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பங்கு வெளியீட்டுக்கான பொது அறிவிப்பை ஹிட்டாச்சி முதலீட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஹிட்டாச்சி நிறுவனத்தின் 70,00,990 பங்குகளை ஒரு பங்கின் விலை 821.38 ரூபாய் என்கிற விலையில் ரூ.574.04 கோடிக்கு கையகப்படுத்த உள்ளதாக ஜான்சன் நிறுவனம் கூறியுள்ளது.
ஹிட்டாச்சி பொது பங்கு வெளியீட்டை மும்பை பங்குச்சந்தை மூலம் பட்டியலிட அனுமதி கேட்டுள்ளது. ரூ.10 முக மதிப்பு கொண்ட பெய்ட் அப் ஈக்விட்டி பங்குகளாக வெளியிடுகிறது.
கடந்த வாரத்தில் ஹிட்டாச்சி நிறுவனமும் ஜான்சன் நிறுவனமும் இணைந்து உலக அளவிலான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜான்சன் நிறுவனம் ஹிட்டாச்சி நிறுவனத்தின் 60 சதவீத உரிமையைக் கட்டுப்படுத்தும். ஜப்பானை தவிர்த்து விற்பனை மற்றும் சேவைக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த பரிவர்த்தனைக்கு பிறகு ஜப்பான் சந்தையில் ஹிட்டாச்சி பொருட்கள் தொடர்ந்து விற்பனைக்கு வரும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.