

ஸிப்டயல் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் இந்நிறுவனத்தை வாங்கியது. இந்தியாவில் ட்விட்டர் நிறுவனம் கையகப்படுத்தும் முதல் நிறுவனம் இதுதான்.
இதற்கு முன்பு எம்செக் (mChek) நிறுவனத்தின் உத்திகள் வகுக்கும் பிரிவின் தலைவராக இருந்தார்.
படித்து முடித்து இ-பே நிறுவனத்தில் பணிபுரிந்தார். தவிர சே நௌவ் மற்றும் நிங் ஆகிய இரு நிறுவனங்களில் முக்கிய பணியாளராக சேர்ந்தார். கோல்ட்மென் சாக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவிலும் சில காலம் பணிபுரிந்தார்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர். இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு பெண் சி.இ.ஓ. (தொழில்நுட்பப் பிரிவில்) இவர் மட்டும்தான்.
2014-ம் ஆண்டில் உலகின் புதுமையான நிறுவனங்கள் பட்டியலில் ஸிப்டயல் நிறுவனத்துக்கு எட்டாம் இடம் கொடுத்திருக்கிறது பாஸ்ட் கம்பெனி நிறுவனம்.