

சொகுசு ரகக் கார்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ நிறுவனம் எம்6 ரக காரை அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லியில் இதன் விற்பனையக விலை ரூ. 1.75 கோடி.
நாடு முழுவதும் வியாழக்கிழமை முதல் இந்த ரகக் கார் கிடைக்கும் என்று ஆலையில் நடைபெற்ற அறிமுக விழாவில் நிறுவனத் தலைவர் பிலிப் வோன் சாஹ்ர் தெரிவித்தார். எம்6 கிராண் குபே கார், உதிரி பாகமாக இறக்குமதி செய்யப்பட்டு குர்காவ்னில் உள்ள ஆலையில் அசெம்ப்ளி செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு மேலும் 4 புதிய ரக மாடலை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். குர்காவ்னில் உள்ள ஆலையில் ரூ. 16 கோடி செலவிலான பயிற்சி மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இந்நிறுவனத்தின் சென்னை ஆலையில் 7 மாடல் கார்கள் அசெம்பிள் செய்யப்படுகின்றன.