விமான எரிபொருள் விலை 12.5% குறைப்பு

விமான எரிபொருள் விலை 12.5% குறைப்பு
Updated on
1 min read

விமான எரிபொருள் கட்டணம் அதிரடியாக 12.5 சதவீதம் குறைக்கப் பட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை 5 வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பதால், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து ஆறாவது முறையாக விமான எரிபொருள் கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதன்படி ஒரு கிலோ லிட்டருக்கு 7,520 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 2002-ம் ஆண்டு விமான எண்ணெய் மீதான விலை கட்டுப்பாட்டை தளர்த்திய பிறகு அதிகளவு விலை குறைப்பது இப்போதுதான். கடந்த டிசமப்ர் 1-ம் தேதி 4.1 சதவீதம் வரைக்கும் விலை குறைக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு மட்டும் கச்சா எண்ணெய் 48 சதவீதம் வரை சரிந்தது.

விமான எரிபொருள் இதுவரை உச்சபட்சமாக 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு கிலோ லிட்டர் ரூ.76,241 என்ற அளவில் இருந்தது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து குறைப்பட்டு வருகிறது.

விமான நிறுவனங்களின் செயல்பாட்டு கட்டணத்தில் 40 சதவீதம் வரை விமான எரிபொருளுக்கு செலவாகிறது. அதனால் எரிபொருள் கட்டணம் குறைக்கபட்டதால் விமான நிறுவனங்களின் நிதிச்சுமை குறையும். ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் நாள் விமான எரிபொருள் கட்டணம் மாற்றி அமைக்கப்படும்.

பங்குகள் உயர்வு

எரிபொருள் கட்டணம் குறைந்ததால் விமான நிறுவன பங்குகள் விலை உயர்ந்தது. ஜெட் ஏர்வேஸ் பங்கு 9.23 சதவீதம் உயர்ந்து 420 ரூபாயில் முடிவடைந்தது. அதேபோல ஸ்பைஸ்ஜெட் பங்கு 4.94 சதவீதம் உயர்ந்து 18.05 ரூபாயில் முடிவடைந்தது.

முதல் நாள் வர்த்தகம்

ஆண்டின் முதல் நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 8 புள்ளிகள் உயர்ந்து 27507 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேபோல நிப்டி 1 புள்ளி உயர்ந்து முடிவடைந்தது. புதன் கிழமை வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 481 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருந்தார்கள். டெலிகாம் பங்குகளும் நேற்றைய வர்த்தகத்தில் நன்றாக உயர்ந்தன. பார்தி ஏர்டெல் 2.9 சதவீதமும், ஐடியா 3.6 சதவீதமும் உயர்ந்தன.கடந்த ஆண்டில் செக்செக்ஸ் 6358 புள்ளிகள் உயர்ந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in