Published : 05 Jan 2015 12:13 PM
Last Updated : 05 Jan 2015 12:13 PM

காலாண்டு முடிவுகளை எதிர்நோக்கும் பங்குச்சந்தை

புதுவருடத்தின் முதல் வாரத்தில் பங்குச்சந்தை சிறப்பாக செயல் பட்டுள்ளது. வரும் வாரத்தில் சந்தை தற்போதைய சூழலிலேயே நிலைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு முடிவு வரும் வெள்ளிக்கிழமை வர இருக் கிறது.

இதனை பொறுத்து சந்தையின் அடுத்தகட்ட நிகழ்வு இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

மேலும், சர்வதேச முதலீட்டா ளர்களின் மனநிலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை நிலவரம் உள்ளிட்டவையும் பங்குச் சந்தையின் போக்கை தீர்மா னிக்கும். தவிர, வங்கித்துறை மாநாடு சனிக்கிழமை முடிந்தது. அதில் வெளியான அறிவிப்புகளால் வங்கிப்பங்குகள் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பி இருக்கிறது.

கடந்த வாரத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் 2 சதவீதம் வரை உயர்ந்து முடிந்தன.

நிப்டி தன்னுடைய 50 நாள் சராசரி விலையை தாண்டி முடிந்துள்ளது.

இருந்தாலும் 8400 என்ற முக்கிய புள்ளியை தாண்டி முடிவடையாமல் 8395 புள்ளியில் முடிவடைந்தது. திங்கள்கிழமை இந்த புள்ளியை தாண்டி முடிவடையும்போது நிப்டியின் அடுத்த இலக்கு 8550 மற்றும் 8626 ஆகும்.

குறுகியகால வர்த்தகர்கள், பங்குச்சந்தை சரியும்போது 8250 என்னும் புள்ளியை ஸ்டாப்லாஸ் என வைத்துக்கொண்டு முதலீடு செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x