ஸ்பைஸ்ஜெட் இயக்குநர் குழுவில் இருந்து வெளியேறினார் மாறன்: ரூ.1,500 கோடி நிதி திரட்ட நிறுவனம் முடிவு

ஸ்பைஸ்ஜெட் இயக்குநர் குழுவில் இருந்து வெளியேறினார் மாறன்: ரூ.1,500 கோடி நிதி திரட்ட நிறுவனம் முடிவு
Updated on
1 min read

கலாநிதி மாறன் வசம் இருந்த 58.46 சதவீத பங்குகள் அஜய் சிங் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டன. மேலும் ஸ்பைஸ்ஜெட் இயக்குநர் குழுவில் இருந்து கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் நிர்வாக இயக்குநர் நடராஜன் ஆகியோர் விலகுவதாகத் தெரிவித்தனர். இவர்களது ராஜிநாமா இயக்குநர் குழுவால் உடனடியாக ஏற்கப்பட்டது.

தவிர நிறுவனத்தின் பதிவு அலுவலகத்தை தமிழகத்தில் இருந்து புதுடெல்லிக்கு மாற்றவும் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

மேலும் 1,500 கோடி ரூபாய் நிதி திரட்டவும் இயக்குநர் குழு முடிவெடுத்திருக்கிறது. இது பங்குகள், வாராண்ட், அமெரிக்கன் டெபாசிட்டரி ரெசிப்ட், குளோபல் டெபாசிட்ரி ரெசிப்ட், எப்.சி.சி.பி உள்ளிட்ட ஏதேனும் ஒரு வழியில் திரட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மொத்த தொகை 1,500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்காது என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தவிர கலாநிதி மாறனுக்கு (கேஏஎல் ஏர்வேஸ்) 37.5 லட்சம் பங்குகளாக மாற்ற முடியாத முன்னுரிமை பங்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒரு பங்கின் விலை ரூ.1,000 ஆகும்.

ஜனவரி 15-ம் தேதி கலாநிதி மாறன் தன்வசம் இருக்கும் பங்குகளை விற்க இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியது.

அஜய் சிங்குக்கு இது இரண்டாவது இன்னிங்ஸ் ஆகும். ஏற்கெனவே 2005-ம் ஆண்டு முதலீட்டாளர்களுடன் சேர்ந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை நிறுவினார்.

நேற்று வர்த்தகத்தின் முடிவில் பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தாலும் இந்த பங்கு 1.83 சதவீதம் உயர்ந்து 22.20 ரூபாயில் முடிவடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in