மோடி அலை: குஜராத் நிறுவன பங்குகள் விலை உயர்வு

மோடி அலை: குஜராத் நிறுவன பங்குகள் விலை உயர்வு
Updated on
1 min read

நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் மோடி அலை வீசுவதைத் தொடர்ந்து குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களின் பங்கு விலைகள் மும்மடங்கு உயர்ந்துள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜக-வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை பாஜக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து குஜராத்தில் செயல்படும் அதானி குழும பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளன.

கடந்த செப்டம்பரில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்கு விலை ரூ. 141.20 ஆக இருந்தது. இது மூன்று மடங்கு உயர்ந்து ரூ. 437.50-க்கு இப்போது விற்பனையாகிறது. அதானி பவர் பங்கு விலை 52 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல அதானி போர்ட் 42.54 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதேபோல அரவிந்த் லிமிடெட், குஜராத் பிபவாவ் போர்ட், குஜராத் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன், காடிலா ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

டாரன்ட் பவர், குஜராத் மாநில பெட்ரோனெட், குஜராத் ஆல்கலிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலையும் அதிக அளவு உயர்ந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in