

இந்திய நிறுவனங்கள் வெளி நாடுகளில் முதலீடு செய்வதற்கான விதிகளை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தளர்த்தியுள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நிலை திருப்திகரமாக இருப்பதையடுத்து விதிகளை தளர்த்தியுள்ளது ஆர்பிஐ.
வெளிநாடுகளில் முதலீடு செய்யப்படும் நிதியின் அளவுக்கு நிகரான பங்குகளை அடமானமாக வைக்க வேண்டும். இதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு கட்டணத்தை வங்கிகள் வசூலித்து வெளிநாடுகளில் முதலீடு செய்ய அனுமதிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு முன்பு வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்காக நிதி திரட்டுவது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். வரம்பும் மாறுபடும். கூட்டு நிறுவனமாக இருந்தால் அல்ல துணை நிறுவனமாக இருந்தால் பங்குகளை அடகு வைப்பது என்பது மாறுபடும் என ஆர்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
டிசம்பர் 19-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 31,999 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.