உணவு பதப்படுத்தல் துறைக்கு ரூ.444 கோடி ஒதுக்கீடு

உணவு பதப்படுத்தல் துறைக்கு ரூ.444 கோடி ஒதுக்கீடு
Updated on
1 min read

உணவு பதப்படுத்தல் துறைக்கு அரசு 7 மாதங்களில் ரூ.444 கோடி ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும்.

இந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையான 7 மாத காலத்தில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 444.38 கோடியாகும். உணவு பூங்கா, குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட தொழில்கள் தொடங்க இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.207.35 கோடி ஒதுக்கப்பட்டதாக உணவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் முதல் டிசம்பர் வரையான காலத்தில் 5 மெகா உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது வரையில் 42 திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதில் 25 திட்டப் பணிகள் இப்போது செயல்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேசிய உணவு பதப்படுத்தும் தொழில் திட்டத்தின் (என்எம்எப்பி) கீழ் 2013 டிசம்பர் முதல் 2014 மே மாதம் வரை ரூ. 34.99 கோடி தொகை 12 மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையான காலத்தில் 22 மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.94.27 கோடி.

இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி அளவு கணிசமாக அதிகரித்துள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

புதிய அரசு பொறுப்பேற் றதிலிருந்து அதாவது ஜூன் முதல் டிசம்பர் வரையான காலத்தில் 10 குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 7 குளிர்பதன கிடங்குகளுக்குத்தான் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இது வரையில் 2.46 லட்சம் டன் பழங்கள், காய்கறிகள் குளிர் பதன கிடங்கில் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. 84.86 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்பட் டுள்ளன. 330 குளிர்வசதி கொண்ட டிரக்குகள் மற்றும் மணிக்கு 59 டன் விரைவு குளிர்விப்பான்கள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு ரூ.2000 கோடியை தேசிய ஊரக வேளாண் மேம்பாட்டு (நபார்டு) வங்கி மூலம் ஒதுக்கியுள்ளது. குறைந்த வட்டியில் உணவு பதப்படுத்தல் துறைக்கு டன் வழங்க இது ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளும் இதில் பங்கேற்கும் வகையில் இத்திட்டம் மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in