Published : 04 Dec 2014 11:14 AM
Last Updated : 04 Dec 2014 11:14 AM

ராஜேஷ் குப்தா - இவரைத் தெரியுமா?

$ இந்தியாவின் மெமரி கார்டு சந்தையில் 35 சதவீதத்துக்கு மேல் வைத்திருக்கும் சான்டிஸ்க் நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவர். இந்த பொறுப்பில் 2013 மே மாதம் முதல் இருக்கிறார்.

$ இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு மே மாதம் முதல் இதே நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குநராக இருந்தார்.

$ விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவில் 22 வருடங்களுக்கும் மேலான அனுபவம் இருக்கிறது. இன்டெல் நிறுவனத்தில் 15 வருடங்கள் பணிபுரிந்தார். மேலாளராக சேர்ந்தவர் விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவு இயக்குநர் பொறுப்பு வரை உயர்ந்தார்.

$ அதற்கு முன்பு ஹெச்.சி.எல். இன்போ சிஸ்டத்தில் சில வருடங்களும், சிஎம்சி (இந்த நிறுவனத்தை இப்போது டிசிஎஸ் நிறுவனம் இணைத்துக்கொண்டது) நிறுவனத்தின் பிராண்ட் மேனேஜராகவும் இருந்திருக்கிறார்.

$ 2011-ம் ஆண்டு வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

$ காஸியாபாத்தில் இருக்கும் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் டெக்னாலஜியில் எம்பிஏ படித்தவர்.

$ ஆன்லைன் விற்பனை அதிகரித்து வருகிறது என்றாலும் எங்களது வழக்கமான விற்பனை வழிமுறைகளிலும் கவனம் செலுத்துகிறோம் என்று சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x