Published : 12 Dec 2014 09:31 AM
Last Updated : 12 Dec 2014 09:31 AM

74 லட்சம் போலி லைசென்ஸ்

இந்தியாவில் மொத்தம் 74 லட்சம் போலி லைசென்ஸ்கள் இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. வாகனம் ஓட்டும் உரிமம் பெற்ற 6 கோடி பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 74 லட்சம் லைசென்ஸ்கள் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரே எண்ணில் பலருக்கு டிரைவிங் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக என்ஐசி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் போலிலைசென்ஸ் அல்லது டூப்ளிகேட் லைசென்ஸ் வைத்திருப்போரின் எண்ணிக்கையானது (74 லட்சம்) ஹாங்காங் மக்கள் தொகைக்கு இணையானது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

லைசென்ஸ் வழங்குவதில் தொடர்ச்சியான தவறுகள் ஏற்படுவதாலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரே நபருக்கு பல்வேறு மண்டல போக்குவரத்து அலுவலகங்கள் லைசென்ஸ்கள் வழங்கியுள்ளன. டூப்ளிகேட் லைசென்ஸ்கள் 13 சதவீதம் பேரிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய தகவல் மையம் (என்ஐசி) இந்த ஆய்வை நடத்தியது. லைசென்ஸ் வழங்குவதற்கு போக்குவரத்து அலுவல கங்கள் கடைப்பிடிக்கும் முறை களின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. அதாவது லைசென்ஸ் வைத்திருப்போர் பெயர், தந்தை பெயர், மகன் பெயர், பிறந்த தேதி அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது.

கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி 30 சதவீத ஓட்டுநர் உரிமங்கள் போலியானவையாக உள்ளன என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் குறையைப் போக்க தனது அமைச்சகம் ஒரே மாதிரியான தகவல் தொழில்நுட்ப உதவியுடன் ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். இதன் மூலம் சாலை விபத்துகளை பெருமளவு குறைக்க முடியும் என்றும் குற்றம் புரியும் டிரைவர்களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்க முடியும் என்று குறிப்பிட்டார்.

குறிப்பேடு முறையில் கையெழுத்தில் பதிவு செய்யும் முறையில் பல்வேறு தவறுகள், குளறுபடிகள் நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய ஆவணங் களை போதிய வகையில் பராமரிக்காததும் இதற்குக் காரணமாகும். பழைய ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும்போது இதுபோன்ற தவறுகள், குளறுபடிகள் குறையும்.

மேலும் இரண்டாவதாக லைசென்ஸ் பெறுவதற்கு வேறு மண்டல ஆர்டிஓ அலுவலகத்தை மக்கள் நாடுகின்றனர். தவறு செய்து அவர்கள் லைசென்ஸ் முடக்கப்பட்டிருந்தாலும், வேறு ஆர்டிஓ அலுவலகம் மூலம் லைசென்ஸ் பெறுகின்றனர். ஆர்டிஓ அலுவலகங்கள் ஒருங் கிணைக்கப்படாததால் இத்தகைய தவறுகள் நிகழ்கின்றன. ஆர்டிஓ அலுவலகம், காவல்துறை தகவல் பரிமாற்றம் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் ஆர்டிஓ-க்கள் இரண்டாவது லைசென்ஸை அளித்து விடுகின் றனர் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x