10 சதவீத வளர்ச்சியை நோக்கி உணவு பதப்படுத்தும் துறை

10 சதவீத வளர்ச்சியை நோக்கி உணவு பதப்படுத்தும் துறை
Updated on
1 min read

உணவு பொருள் பதப்படுத்தும் துறை 2015-ம் ஆண்டிலிருந்து சராசரியாக 10 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தனியார் துறை முதலீடுகள் அதிகரித்துவருவதால் வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய உணவு பதப்படுத்துதல் துறையின் தற்போதைய வளர்ச்சி சராசரியாக 8.4 சதவீதமாக உள்ளது. இந்த துறையில் தனியாரின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்த பிறகு இந்த துறையில் முதலீடு அதிகரித்து வருவதாக டெக்னோபாக் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ’இந்தியா: உலகத்தின் வளரும் உணவு தலைவர்’ என்கிற தலைப்பில் இந்திய உணவு பதப்படுத்தும் துறை குறித்து ஆய்வு செய்துள்ளது.

உணவு பதப்படுத்துதல் துறையில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் ( உற்பத்தி, வளர்ச்சி மற்றும் நுகர்வு ஆகிய பிரிவுகளின் அடிப்படையில்) உள்ளது. மேலும் ஏற்றுமதி வரும் 2015 ஆண்டிறுதியில் 19,400 கோடி டாலராக இருக்கும் எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு பேசிய அந்த குழுவின் தலைவர் ஷரத் ஜெய்பூரியா கூறுகையில் ’’உள்நாட்டு உணவுத் தேவையில் பதப்படுத்தபட்ட உணவின் பங்கு மூன்றில் ஒரு பகுதியாக உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவு தேவை அதிகரித்துவரும் நிலையில் உலக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் தேவையும் அதிகரித்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in