

மூத்த ஐ.ஏ.எஸ் அலுவலரான எஸ்.பட்டாச்சார்யா பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆறு மாதங்களாக முழு நேர தலைவர் இல்லாமல் இருந்தது கோல் இந்தியா.
இரண்டு நாட்களுக்கு முன்பு இவரது நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. தற்போது கூடுதல் செயலாளர் (நிலக்கரி) ஏ.கே.துபே நிறுவனத்தின் தலைவராக இருக் கிறார். இவரிடமிருந்து தலைவர் பொறுப்பை பட்டாச்சார்யா பெற்றுக் கொள்வார்.
எஸ்.நர்சிங் ராவ் கடந்த மே மாதம் கோல் இந்தியா நிறுவனத் தில் இருந்து ராஜினாமா செய்தார். ஜூன் 26-ம் தேதி முதல் ஏ.கே.துபே தலைவராக கூடுதல் பொறுப்பை கவனித்துவந்தார். பட்டாச்சார்யா தற்போது சிங்கரேனி கொல்லிரிஸ் (Singareni Collieries Company) நிறுவ னத்தின் தலைவராக இருக்கிறார்.
கோல் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் நாகேந்திர குமார், என்.எம்.டி.சி.தொழில்நுட்ப இயக்குநர் என்.கே. நந்தா உள்ளிட்ட 12 நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அதில் பட்டாச்சார்யா தேர்வு செய்யப் பட்டார்.