Published : 17 Dec 2014 10:32 AM
Last Updated : 17 Dec 2014 10:32 AM

ஜென்ஸ் வெய்ட்மென் - இவரைத் தெரியுமா?

$ ஜெர்மனியின் பொருளாதார அறிஞர், டாயிஷ் பண்டெஸ் வங்கியின் தலைவராக 2011-ம் ஆண்டிலிருந்து இருக்கிறார்.

$ 2006-ம் ஆண்டிலிருந்து ஜெர்மன் அரசின் பொருளாதார ஆலோசகராக இருந்தார்.

$ ஜி-8 மற்றும் ஜி 20 மாநாடுகளில் ஜெர்மன் சார்பில் நடைபெற்ற விவாதங்களில் பிரதானமானவராக இருந்தார்.

$ பாரிஸில் உள்ள பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், மான்ஹேம் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

$ கல்லூரியில் படிக்கும் போதே பிரான்ஸ் வங்கியில் சில காலமும், ருவாண்டா தேசிய வங்கியில் பயிற்சியாளராகவும் பணியாற்றி இருந்தார். பிரான்ஸ் பொருளாதாரமும், ஜெர்மனி பொருளாதாரமும் நன்கு அறிந்தவர்.

$ 1997-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் சர்வதேச செலாவணி நிதியத்தில் (ஐஎம்எப்) பணியாற்றினார். பிறகு அங்கிருந்து பண்டெஸ் வங்கிக்கு மாறினார். 2006-ம் ஆண்டு வரை வங்கியின் நிதிக் கொள்கை, நிதிப் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x