

தொழிலாளர் மாநில காப்பீடு நிறுவனத்தின் (இஎஸ்ஐசி) சலுகையைப் பெற ஊழியர்களின் சம்பள வரம்பை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பதிலளித்த அவர், இஎஸ்ஐசி நிறுவனம் பல்வேறு மேம்பட்ட சேவை களை அளிப்பதற்காக சில யோசனைகளை செயல்படுத்த உள்ளது. ஊழியர்கள் இஎஸ்ஐ சலுகை களைப் பெறுவதற்காக சம்பள வரம்பை உயர்த்துவது குறித்தும் பரிசலிக்கப்படுகிறது என்றார்.
மார்ச் 31 நிலவரப்படி 1.74 கோடி ஊழியர்கள் இஎஸ்ஐ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தேசிய சாம்பிள் சர்வே நடத்திய கணக்குப்படி முறைசார் தொழிற்சாலைகளில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 2.89 கோடியாகும். இஎஸ்ஐ-யில் பதிவு செய்துள்ள பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 60.2 சதவீதம் என்றார். புற்றுநோய் உள்ளிட்ட உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்படும் இஎஸ்ஐ திட்டத்தில் உள்ளது. இந்த நோய் வந்தவர்கள் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் அனுமதிக்கப்படுகின் றனர் என்றார்.
மாநில அரசுகளிடமிருந்து ஏறக்குறைய 56 பரிந்துரைகள் வந்துள்ளன. இவற்றில் 28 பரிந்துரைகள் கேரள அரசிட மிருந்து வந்துள்ளதாக அவர் கூறினார்.