வாராக் கடன் அதிகரிப்பால் வங்கிகள் திணறல்: மக்களவையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

வாராக் கடன் அதிகரிப்பால் வங்கிகள் திணறல்: மக்களவையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்
Updated on
1 min read

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அதிகரிப்பால் வங்கிகள் திணறுவதாக மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பதில ளித்த அவர், வாராக் கடனை வசூலிக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினார்.

பணத்தை செலுத்துவற்கு வசதியிருந்தும் வேண்டுமென்றே செலுத்தாமலிருக்கும் ``வில்ஃபுல் டிபால்டரி’’-டமிருந்து வசூலிக்க பல்வேறு நடவடிக்கைகளை வங்கிகள் எடுத்து வருவதாகக் கூறினார். பொதுவாக வங்கிகளின் வாராக் கடன் அளவு 2 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை இருந்தால் அவற்றை சமாளிக்க முடியும். ஆனால் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் வாராக்கடன் 6 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று ஜேட்லி குறிப்பிட்டார்.

கடன் பெற்று திரும்ப செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்ட (ஐபிசி) விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். பொருளாதாரத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் தேக்க நிலை, கடனுக்கான வட்டி அதிகமாக இருப்பது உள்ளிட்ட காரணிகள் வங்கிச் சேவையில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. வாராக் கடன் அதிகரித்ததற்கு இவையும் காரணமாகும்.

2013-14-ம் நிதி ஆண்டில் வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் 3.9 சதவீதமாக இருந்தது. இப்போது (2013-14) 4.2 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. குறுகிய கால கடன்களை நீண்ட காலக் கடனாக மாற்று வது உள்ளிட்ட நடவடிக்கைகள் 10 சதவீத அளவுக்கு எடுக்கப் பட்டுள்ளன. இது நடப்பு நிதி ஆண்டில் 15 சதவீத அளவுக்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை யான காலத்தில் வங்கிகள் ரூ. 18,933 கோடி வாராக் கடனை வசூலித்துள்ளன. இது மொத்த வாராக் கடன் அளவில் 20 சதவீத மாகும். வங்கிகளின் மொத்த வாராக் கடன் ரூ. 1.92 லட்சம் கோடியாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in