Published : 05 Dec 2014 11:31 AM
Last Updated : 05 Dec 2014 11:31 AM

அஜய் பிஜிலி - இவரைத் தெரியுமா?

$ பிவிஆர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.

$ கல்லூரி படிப்பு முடித்தவுடன் இவரது குடும்ப தொழிலில் இறங்கினார். இவரது அப்பா டெல்லியில் பிரியா என்னும் தியேட்டரை வாங்கி நடத்தி வந்தார். அந்த தியேட்டரை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

$ 1997-ம் ஆண்டு இந்தியாவின் முதல் மல்டிபிளெக்ஸ் தியேட்டரை டெல்லியில் அமைத்தார். பிரியா மற்றும் ஆஸ்திரேலிய நிறுவனமான வில்லேஜ் ரோட்ஷோ நிறுவனத்துடன் இணைந்து பிவிஆர் (பிரியா வில்லேஜ் ரோட்ஷோ) நிறுவனத்தை அமைத்தார்.

$ இப்போதைக்கு 43 நகரங்களில் 454 திரைகளில் இந்த நிறுவனம் செயல்பட்டுக்கொண்டு வருகிறது. 2018-ம் ஆண்டுக்குள் 1000 திரை என்பதை இலக்காக கொண்டு செயல்படுகிறார். 2012-ம் ஆண்டு சின்மேக்ஸ் நிறுவனத்தை இணைத்தார்.

$ டெல்லி ஹிந்து கல்லூரியிலும், ஹார்வேர்ட் நிர்வாக கல்லூரியிலும் படித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x