

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் இன்னும் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. இதனால் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
பெட்ரோல் பொருட்கள் மீதான வரிவிதிப்பில் மத்திய மாநில அரசுகளிடையே முழுமையான புரிந்துணர்வு ஏற்படவில்லை. அதிகாரம் அளிக்கப்பட்ட மாநில நிதியமைச்சர்கள் குழு இதனை நிராகரித்து விட்டது. மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு சரியான வகையில் ஈடுசெய்ய வழிகாணப்பட வேண் டும் என்று இக்குழு தெரிவித்திருக்கிறது. ஜிஎஸ்டியை அமல்படுத்திய பிறகு 5 ஆண்டுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும்படி மாநில அரசுகள் கேட்கின்றன.
கடந்த முறை மாநில அரசுகள் பரிந்துரை செய்த கோரிக்கைகளில் ஒரு கோரிக்கை மட்டும் இந்த வரைவு மசோதாவில் சேர்க்கப் பட்டிருக்கின்றன. மற்றவை இந்த வரைவு மசோதாவில் இல்லை என்று அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சரவை குழு தலைவர் அப்துல் ரஹீம் ரதோர் தெரிவித்தார்.