Published : 05 Dec 2014 11:16 AM
Last Updated : 05 Dec 2014 11:16 AM

3ஜி அலைக்கற்றை: விதிமுறை அமலில் நீடிக்கும் குழப்பம்

3ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து 4 ஆண்டுகள் ஆன பிறகும் தொலைத் தொடர்புநிறுவனங்களுக்கு இதற்கான விதிமுறைகள் முறைப்படுத்தப்படவில்லை. 2010ல் 3ஜி நெட்வொர்க் லைசன்ஸ்கள் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டன. ஆனால் இப்போது வரை சுழற்சி முறையிலான விதிமுறைகளையே தொலைதொடர்பு நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.

தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த லைசென்ஸ் 2015 ஆம் ஆண்டோடு மாற்றியமைக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை எப்படி நிறைவேற்றுவது என்ற குழப்பமான நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளன.

தொலைத் தொடர்பு நிறுவனங் கள் விதிமுறைகளை பின்பற்றும்படி வலியுறுத்துமாறு தொலைத் தொடர்புத் துறையை (டிஓடி) தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கேட்டுக் கொண்டுள்ளது. 2015-க்குள் மாவட்ட தலை நகரங்களில் 50 சதவீதம் 3ஜி சேவை கொடுக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 15 சதவீத சேவை கிராமங் களுக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கிராமப்புறங்களில் வாழ்ந்து வரும் 50 சதவீத மக்களுக்கும் இந்த சேவை சென்று சேர வேண்டும். இது குறித்து தொலை தொடர்பு துறை தெளிவாக வரையறுக்கவில்லை. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ராஜஸ்தானில் சேவை அளிப்பது குறித்து எந்த வழிகாட்டுதல்களையும் தொலைதொடர்பு அமைச்சகம் கொடுக்கவில்லை.

மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொலைதொடர்பு அமைச்சகம் ஒரு பட்டியல் தயாரித்தது எனினும் அந்த பட்டி யலில் பல தவறுகள் உள்ளன. குறிப்பாக தொலைதொடர்பு வளங் கள் மற்றும் கண்காணிப்பு குழு ஹரியாணாவை அடிப்படையாகக் கொண்டு ஒரு புள்ளிவிவரத்தை தயாரித்தது.

ஆனால் குர்காவ்ன் மற்றும் பஞ்சகுலா பகுதிகளும் இந்த பட்டியலில் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் குஜராத் உள்ளிட்ட நாட்டின் எல்லை பகுதிகளில் தொலைதொடர்பு ஆப்பரேட்டர்கள் வேறு மாதிரியான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

ஆப்பரேட்டர்கள் கூறியுள்ள பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளது. பல ஆபரேட்டர்கள் 3ஜி சேவை யை இன்னும் தொடங்கவே இல்லை. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சேவையை அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தொலை தொடர்பு அமைச்சகத்துக்கு இந்த நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. இதுபோல டிக்கோனா மற்றும் அகியுரே நிறுவனங்கள் தங்களது சேவைகளை தொடங்கவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x