

செயில் பங்கு விற்பனைக்குக் கிடைத்த அமோக வரவேற்பினால், மேலும் சில பொதுத்துறை நிறுவனங்களை பங்குகள் விற்பனைக்கு வரும் என்று நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல நிறுவனங்கள் இந்த பட்டியலில் இருக்கின்றன. இந்த வரவேற்பு தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டில் ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா மற்றும் என்.ஹெச்.பி.சி. ஆகிய நிறுவனங்களின் சில பங்குகளை விலகிக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் 43,425 கோடி ரூபாயை திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை விலக்கி கொள்ள மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
தவிர கன்டெயினர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, பி.எப்.சி. மற்றும் ஆர்.இ.சி. ஆகிய நிறுவனங்களில் இருந்து 5 சதவீத பங்குகளை விலக்கி கொள்ள மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களில் சிறு முதலீட்டா ளர்களின் பங்கு 25 சதவீதம் இருக்க வேண்டும். இந்த இலக்கை படிப்படியாக எட்டுவோம் என்று அவர் தெரிவித்தார்.
பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையம் பொதுத் துறை நிறுவனங்களில் சிறுமுதலீட் டாளர்களின் பங்கினை அடுத்த மூன்று ஆண்டுக்குள் 25 சதவீதம் இருக்க வேண்டும் என்று தெரிவித்தது.