Published : 10 Dec 2014 11:15 AM
Last Updated : 10 Dec 2014 11:15 AM

அகிலேஷ் ஜோஷி - இவரைத் தெரியுமா?

$ ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2012 பிப்ரவரியில் இருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.

$ 1976-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் இவர் இணைந்தார். அதிலிருந்து பல கட்டங்களைத் தாண்டி தலைமை பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

$ துணைத்தலைவர், முதன்மை துணைத்தலைவர், தலைமைச் செயல்பாட்டு அதிகாரி என சுரங்கத்துறையில் பல முக்கியமான பொறுப்புகளை வகித்தவர்.

$ இந்த நிறுவனத்துக்கு வருவதற்கு முன்பு சில காலம் ஜோத்பூர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி இருக்கிறார்.

$ ஜோத்பூரில் இருக்கும் எம்.பி.எம். பொறியியல் கல்லூரியில் சுரங்க பொறியியல் படித்தவர். பாரிஸில் இருக்கும் சுரங்க கல்லூரியில் முதுகலை டிப்ளமோ படித்தவர்.

$ ஸ்டெர்லைட் இயக்குநர் குழுவில் சில காலம் இருந்தவர். பிஸினஸ் டுடே பத்திரிகையின் சிறந்த சி.இ.ஓ.விருதினை பெற்றவர். Indian Mining Engineering Journal இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x