

மொத்த விலை குறியீட்டு எண் பூஜ்ஜியம் என்ற நிலையை தொட்டிருந்தாலும், இந்திய பொருளாதாரம் பணவாட்ட (deflation) நிலைக்கு செல்லவில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
பண வாட்டத்தை பற்றி இப்போதைக்கு கவலைப்பட தேவை இல்லை. இது குறித்த அச்சம் தேவையற்றது என்பதும் அவர்களின் கருத்தாகும்.
தற்போதைய நிலையில் பூஜ்ஜிய பணவீக்கம் என்பது ஒரு புள்ளிவிவரம் மட்டுமே.
கடந்த ஒரு வருடத்துக்கு முன் விலைவாசி அதிகமாக இருந்ததால், இப்போது பூஜ்ஜியம் போல நமக்கு தெரிகிறது. ஒரு வருடத்துக்கு முந்தைய நிலையில் இருந்து விலைவாசி இறங்கி இருக்கிறதே தவிர பணவாட்டம் அல்ல. பணவாட்டம் பொருளாதா ரத்துக்கு மிகப்பெரும் சேதம் விளைவிக்க கூடியது. பணவாட்டம் இருக்கும்போது கடன் வழங்குவது குறையும், தனிப்பட்ட நபர்களின் செலவுகள் மட்டுமல்லாமல், அரசாங்கம் செய்யும் செலவுகளும் குறையும்.
மேலும் பணவாட்ட சூழ்நிலை உருவாகும்போது, தேவை குறையும். வேலையில்லாதவர் களின் எண்ணிக்கை அதிக ரிக்கும். இதன் காரணமாக பொருளாதாரம் மேலும் மோசமடையும்.
இதனால் தான் பணவீக்கம் பூஜ்ஜியம் என்றவுடனே அச்சம் ஏற்படுகிறது. இப்போதைக்கு இந்த அச்சம் தேவையற்றது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தகவல்கள்படி நவம்பர் மாத மொத்த விலை குறியீட்டு எண் பூஜ்ஜியம் என்ற நிலையில் இருக்கிறது. அதற்கு முந்தைய மாதத்தில் இது 1.77 சதவீதமாக இருந்தது.
பணவீக்கம் சமீபத்தில் குறைய காய்கறிகள் விலை குறைந்ததுதான் காரணம். ஆனால் கடந்த வருடம் காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது.
நொமுரா நிறுவனத்தின் பொரு ளாதார வல்லுநர் கூறும்போது, சந்தை எதிர்பார்ப்புகளையும் மீறி மொத்த விலைக்குறியீட்டு எண் மிகவும் சரிந்தது. இதற்கு பொருட்களின் விலை குறைந் ததுதான் காரணம் என்றார்.
சிட்டி குரூப் வல்லுநர் குறிப்பிட்டபோது, மொத்தவிலை குறியீட்டு எண் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மாறும் என்றார்.
இருந்தாலும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக பணவீக்கம் அடுத்த சில மாதங்களில் பெரிதாக உயராது என்றும் தெரிவித்தார்.