முதல் ரெஜிஸ்ட்ரேஷன் கார்! - டி. இமான்

முதல் ரெஜிஸ்ட்ரேஷன் கார்! - டி. இமான்
Updated on
1 min read

போக்ஸ்வேகன் - பஸாட் தனக்குப் பிடித்தமான கார் என்கிறார் இசையமைப்பாளர் டி. இமான். ஒரு ரெஸ்ட்ரான்டில்தான் அந்த காரை முதல்முறையாக பார்த்தேன். அதுவும் பெங்களூர் ரெஜிஸ்ட்ரேஷன் கார் அது. அதோட வெளிப்புறத் தோற்றம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. உடனடியாக அந்தக் காரை வாங்க வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்தேன். என் பயணங்களின் நண்பனாக என்னிடம் அந்த கார் வந்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது.

சென்னையில் முதல் ரெஜிஸ்ட்ரேஷன் கார் என்கிற முத்திரையோடு அதை வாங்கினேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனநிலையில் இருப்போம். எல்லாவிதமான தருணங்களும் வெள்ளை நிறம் மிகவும் மனதிற்கு நெருக்கமாகும். அதனால்தான் வெள்ளை நிறத்தில் என்னோட காரைத் தேர்வு செய்தேன். பெடல் மாடல். சின்னச் சின்ன பொழுதுபோக்கு நேரங்கள், முக்கிய அலுவல் சந்திப்பு நிமிடங்கள் எல்லாவற்றிற்கும் என்னோட ‘பஸாட்’தான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in