

புகைப்படங்களை பகிர்ந்து கொள் ளும் நிறுவனமான இன்ஸ்டா கிராம் (Instagram) நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3,500 கோடி டாலர் என்று சிட்டி குரூப் தெரிவித்திருக் கிறது.
இது ட்விட்டர் சமூக வலைத் தளத்தின் மதிப்பை விட மிகவும் அதிகமாக இருக்கிறது. ட்விட்டர் சந்தை மதிப்பு 2,300 கோடி டாலர்கள் ஆகும்.
கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இன்ஸ்டாகிராம் நிறுவ னத்தை 100 கோடி டாலர் கொடுத்து ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அப்போது 3 கோடி வாடிக்கை யாளர்கள் இருந்தார்கள். இப் போது 30 கோடி வாடிக்கையாளர் கள் பயன்படுத்துவதாக இன்ஸ் டாகிராம் தெரிவித்திருக்கிறது.
ஆண்ட்ராய்ட் இயங்குதளத் தில் இன்ஸ்டாகிராம் அப்ளி கேஷனில் வெளியானபோது பல லட்சம் வாடிக்கையாளர்கள் இதனை பதிவிறக்கம் செய்தார்கள். அதிலிருந்து இந்த நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
கடந்த 9 மாதங்களில் இன்ஸ் டாகிராம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதி கரித்திருக்கிறது. மேலும் இன்ஸ்டா கிராம் போலி கணக்குகள் வைத் திருப்பவர்களை விரும்பவில்லை. சில நாட்களுக்கு முன்பு லட்சக் கணக்கான போலி கணக்குகளை இந்நிறுவனம் அழித்தது குறிப் பிடத்தக்கது.