ரூ.1000 கோடி டெபாசிட்: குஜராத் கிராமம் சாதனை

ரூ.1000 கோடி டெபாசிட்: குஜராத் கிராமம் சாதனை
Updated on
1 min read

கேரள மாநிலத்துக்கு வரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலமான டெபாசிட் தொகை 90,000 கோடி ரூபாய். ஆனால் குஜராத் மாநிலத்தில் இருக்கும் தர்மஜ் கிராமத்தில் இருக்கும் வங்கிகளில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு இந்தியர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். ஆனந்த் மாவட்டத்தில் இருக்கும் தர்மஜ் கிராமத்தின் மக்கள் தொகை 11,333. ஆனால் இந்த கிராமத்தில் மட்டும் 13 வங்கிகள் இருக்கின்றன.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் வதோதரா பிரிவின் துணை பொது மேலாளர் கூறும் போது, இந்த கிராமத்தில் இருக்கும் வெளிநாட்டு இந்தியர்கள் பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்யவே விரும்புகிறார்கள். இவர்கள் செய்திருக்கும் மொத்த முதலீட்டுத் தொகை 1,000 கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிவித்தார்.

குஜராத் மட்டுமல்லாமல் இந்தியாவிலே அதிக பணக்காரர்கள் இருக்கும் கிராமம் தர்மஜ்தான், மேலும் இங்கு படித்தவர்களின் விகிதமும் அதிகம்.

இந்த கிராமத்தில் 3000 படிதர் குடும்பங்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் யாராவது ஒருவர் வெளிநாடுகளில் இருக்கிறார். ஒவ்வொரு குடும்பத்திலும் கார் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 3,120 குடும்பங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in