மொரீஷியஸுக்கு முதலாவது போர்க்கப்பல்: இந்தியா ஏற்றுமதி

மொரீஷியஸுக்கு முதலாவது போர்க்கப்பல்: இந்தியா ஏற்றுமதி
Updated on
1 min read

இந்தியாவிலிருந்து முதலாவது போர் கப்பல் மொரீஷியஸுக்கு ஏற்றுமதி செய்யப்பட உடுள்ளது. 75 அடி நீளம் 15 அடி அகலம் கொண்ட இந்த கப்பலில் 20 மாலுமிகள் பயணிக்கலாம். கட லோர பாதுகாப்புக்காக தயாரிக்கப்பட்ட இந்த கப்பல், சிறிய போர் கப்பலைப் போன்றது.

கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன்ரீச் கப்பல் கட்டும் நிறுவனம் இந்த கப்பலை வடிவமைத்துத் தயாரித்துள்ளது. இந்தியா விலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இந்த போர்க்கப்பலின் விலை ரூ. 350 கோடியாகும். இது 10 நாளில் மொரீஷியஸிடம் ஒப்படைக்கப்படும்.

கோவா கப்பல் கட்டும் தளத்தில் இரண்டு போர் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவை இலங்கை அரசுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. மொரீஷியஸின் கடல் பரப்பு 19 லட்சம் சதுர கிலோமீட்டராகும். இவ்வழியாக கடத்தல், அத்துமீறி மீன் பிடிப்பது, போதை மருந்து கடத்தல் ஆகியவற்றைத் தடுக்க கடலோர பாதுகாப்பு மிகவும் அவசியம். இதற்காக இந்த கப்பல் தயாரிக்கப்பட்டது.

சுற்றுச் சூழல் காப்பு நடவடிக்கையிலும் இந்தக் கப்பலைப் பயன்படுத்த முடியும். கடலில் எண்ணெய்க் கசிவு உள்ளிட்ட வற்றைத் தடுக்கவும் இது பயன்படுத்தப்படும். பொதுவாக கப்பல் கட்டுவதற்கு வெளிநாட்டு உதவியை இந்தியா இதுவரை எதிர்பார்த்திருந்தது. ஆனால் இப்போது நிலை முற்றி லுமாக மாறி நாட்டிலேயே போர் கப்பல் தயாரிக்க முடிவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளது.

கடற்படையில் உள்ள பழைய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு மாற்று ஏற்பாடாக வெளிநாடுகளில் கொடுக்கப்பட்டிருந்த கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சகம் ரத்து செய்தது. இந்திய கப்பல் கட்டும் தளத்தில் வெளிநாட்டு தொழில்நுட்ப ஒத்துழைப்போடு நீர்மூழ்கி கப்பல்களைக் கட்டு வதற்கான வழிகளை ஆராயுமாறு கடற்படையை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய அத்தியாயமாக இந்த ஏற்றுமதி அமைவதோடு இந்தியா, மொரீஷியஸ் இடையிலான உறவும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா அண்டை நாடுகளுடன் குறிப்பாக இந்திய கடல் பகுதியில் உள்ள நாடுகள், பாரசிக வளைகுடா மற்றும் மலாக்கா நீரிணை, தென்னாப்பிரிக்க பகுதிகளில் உள்ள நாடுகளுடன் இணக்கமான போக்கை ராணுவ உத்தியாக கடைப்பிடித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in