இவரை தெரியுமா? - மார்க் ஃபீல்ட்ஸ்

இவரை தெரியுமா? - மார்க் ஃபீல்ட்ஸ்
Updated on
1 min read

l ஃபோர்ட் மோட்டார் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக (Chief Operating Officer) 2012 டிசம்பர் மாதத்தில் இருந்து பணிபுரிகிறார்.

l நியூஜெர்சியில் இருக்கும் Rutgers பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றவர். அதன் பிறகு ஐ.பி.எம். நிறுவனத்தில் சில காலம் வேலை செய்த பிறகு, ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தவர்.

l எம்.பி.ஏ. முடித்தவுடன் 1989-ம் ஆண்டு ஃபோர்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

l ஜப்பான் நிறுவனமான மாஸ்டா மோட்டார் நிறுவனத்தில் போர்ட் நிறுவனத்தின் பங்கு இருந்தது. அப்போது அந்த நிறுவனத்தை மாற்றி அமைக்க சி.இ.ஓ.வாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

l அதன் பிறகு போர்ட் நிறுவனத்தின் சொகுசு வாகனங்கள் தயாரிப்பு பிரிவான Premier Automotive Group-ன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

l போர்ட் நிறுவனத்தின் தற்போதைய சி.இ.ஓவான ஆலன் முலாலி விரைவில் ஓய்வு பெற இருக்கிறார். அந்த பதவிக்கு இவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அமெரிக்க பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in