

இன்போசிஸ் நிறுவனர்களான என்.ஆர்.நாராயண மூர்த்தி மற்றும் நந்தன் நிலகேனி இவர்களது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வசமிருந்த இன்போசிஸ் நிறுவன பங்குகளை விற்பனை செய்தனர். ரூ.6,484 கோடிக்கு இந்த பங்கு விற்பனை நடந்துள்ளது. 3.26 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயணமூர்த்தி குடும்பத்துக்கு 23.3 சதவீத பங்குகளும், நிலகேனி குடும்பத்துக்கு 31.3 சதவீத பங்குகளும், குமாரி சிபுலால் குடும்பத்துக்கு 9.6 சதவீத பங்குகளும் உள்ளன. தற்போதைய நிலவரப்படி இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,37,768 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 21.4 சதவீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 8.9 சதவீத பங்குகள் விற்பனை செய்யப் பட்டுள்ளன.