இந்தியாவில் அடியெடுத்து வைக்கும் விவோ

இந்தியாவில் அடியெடுத்து வைக்கும் விவோ
Updated on
1 min read

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ இந்திய சந்தையில் விற்பனையைத் தொடங்கியுள்ளது. நேற்று முதல் தனது இந்திய விற்பனையை இந்த நிறுவனம் தொடங்கியது. ரூ.32,980 விலையில் எக்ஸ் 5 மேக்ஸ் என்கிற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரியச் சந்தை. உலக அளவில் மிகப்பெரிய வாய்ப்புகளை கொண்டுள்ளது என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள மாடல் இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில் இந்திய சந்தையின் தேவைக்கு ஏற்ப மாடல்களை அறிமுகப்படுத்தும் எண்ணம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் விவா மொபைல் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷென் வெய். விற்பனைக்கான திட்டம் எதையும் விவோ அறிவிக்க வில்லை. சந்தையின் தன்மையை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும், ஆனால் சந்தை சாதகமாக இருக்கும் என்றும் விவோ உயரதிகாரிகள் கூறினர்.

ஆண்ட்ராய்டு 4.4 இயங்கு தளத்தைக் கொண்ட இந்த போன் 4.75 மி.மீ தடிமன் கொண்டது. 13 மேகா பிக்ஸல் கேமராவும், 5 மெகா பிக்ஸல் முன்பக்க கேமராவும் கொண்ட இந்த போன் தற்போதைய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் மெல்லியதான போன் இதுதான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in