

2014 ஆண்டில் சென்செக்ஸ் 6000 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் 2014-ம் வருடம் பங்குச்சந்தைக்கு சிறந்த வருடமாக அமைந்தது.
2014-ம் ஆண்டு முடிவடைய இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது என்றாலும் 2014 ஆண்டு 6038 புள்ளிகள் லாபத்தை கண்டுள்ளது. அதாவது 29 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 2009 ஆண்டுக்கு பிறகு இந்த வருடம் சந்தை சிறப்பாக செயல்பட்டது. 2009-ம் ஆண்டு 7817 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்தது.
சதவீத அளவில் கணக் கிடுகிறபோது 2009 ஆம் (81%வளர்ச்சி) ஆண்டுக்கு அடுத்து இந்த வருடம்தான் சிறப்பாக செயல்பட்டது. 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த அடித் தளத்தை இந்த ஆண்டு அமைத்துக் கொடுத்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏற்றத்துக்கான சந்தையாக இருக்கும் என்பதை உணர்த்தியுள்ளது.
நிப்டி தற்போது 8174 புள்ளிகளில் நிலைகொண்டுள்ளது. இது பிப்ரவரி மாத்தில் 5933 புள்ளியில் வர்த்தகம் ஆனது. சென்செக்ஸ் இந்த இந்த வருடத்தின் உச்ச அளவாக 28,822 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டு வர்த்தம் ஆனது. தற்போது 27,208 புள்ளிகளாக உள்ளது. இந்த வருடத்தில் பிப்ரவரி மாதத்தில் சென்செக்ஸ் 19,963 புள்ளியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2014-ம் ஆண்டு மியூச்சுவல் பண்ட் கையாளும் சொத்துமதிப்பு 32 சதவீதம் உயர்ந்தது.