

கூகுள் நிறுவனம் நடத்திய மூன்று நாட்கள் ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாவில் டாடா ஹவுசிங் நிறுவனம் ரூ 130 கோடி மதிப்புள்ள வீடுகளுக்கான ஆர்டர்களை பெற்றுள்ளது. சுமார் 200 வீடுகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டதாக டாடா ஹவுசிங் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் நான்கு மடங்கு அதிக விற்பனையாகும்.
இந்த வருடம் ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாவில் புரவங் காரா, மஹிந்திரா லைப் ஸ்பேஸ், ஹெச்டிஎஃப்சி ரியாலிட்டி போன்ற இதர நிறுவனங்கள் பங்கேற்றாலும் டாடா ஹவுசிங் அறிவித்த அடக்கவிலை வீடுகள் திட்டத்தால் 130 வீடுகள் வரை புக்கிங் ஆகியுள்ளது. சொகுசு வீடுகளில் மதிப்பு ரூ.3 கோடியாகவும் இருந்தது.
2013ல் நடைபெற்ற ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாவில் 40 சதவீத வீடுகள் 2-ம் நிலை நகரங்களிலிருந்து வாங்கப்பட்டன என்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களால் 30 சதவீத வீடுகள் வாங்கப்பட்டன என்றும் டாடா ஹவுசிங் தெரி வித்துள்ளது.