Published : 23 Dec 2014 10:50 AM
Last Updated : 23 Dec 2014 10:50 AM

மனிஷ் சபர்வால் - இவரைத் தெரியுமா?

$ டீம்லீஸ் என்னும் மனிதவள நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவர் மற்றும் இந்த நிறுவனத்தின் தலைவர்.

$ காஷ்மீரில் பிறந்தவர். இவரது தந்தை அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகத்தில் சில காலம் வேலை செய்ததால் அங்கு சில காலம் இருந்தார்.

$ ஆஜ்மீரில் பள்ளிக்கல்வியும், டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியிலும் படித்தவர். வார்டன் நிர்வாக கல்லூரியில் எம்பிஏ படித்தவர்

$ படித்து முடித்தவுடன் நாகர்ஜூனா குழுமத்தில் சில காலமும், பென்னார் குழுமத்தின் தலைவருக்கு செயல் உதவியாளராகவும் இருந்தார்.

$ தன்னுடைய பள்ளி நண்பர்கள் உதவியுடன் இந்தியா லைப் என்னும் நிறுவனத்தை ஆரம்பித்தார். சில பிஸினஸ் திட்டங்கள் தோல்வியடைய, அவுட்சோர்ஸிங் நிறுவனமாக மாற்றினார். அதனை Hewitt நிறுவனத்திடம் விற்றுவிட்டார். அதன் பிறகு டீம்லீஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

$ நாங்கள் ஐந்து நிமிடங்களுக்கு ஒருவருக்கு வேலை கொடுக்கிறோம், ஆனால் எங்களிடம் வரும் நபர்களில் ஐந்து சதவீதத்தினருக்கு மட்டுமே வேலை கொடுக்க முடிகிறது என்று பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x