

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கல்லூரி மாணவர்களுக்கான டேப்லெட் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபடுவதற்காக ஹூயூலெட் பக்கார்ட் (ஹெச்பி) நிறுவனத்துடன் இணைந்துள்ளது. பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் நிர்வாகவியல் பயிலும் மாணவர் களுக்கு பயனுள்ளதாக இது அமையும்.
விண்டோஸ் 8 இயங்கு தளமும் 10 அங்குல திரையும் கொண்ட ஆம்னி 10 என்ற டேப்லெட் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் விலை ரூ. 29,999 ஆகும். மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தும் இரண்டாவது டேப்லெட் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் ஏசர் ஐகானியா டபிள்யூ-4 அறிமுகப் படுத்தப்பட்டது.
இதன் விலை ரூ. 24,999 ஆகும். ஏசர், எம்பிடி குழுமம் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனங்களுடன் இணைந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் தனியார் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக இதை அறிமுகப்படுத்தியது.
தொழில்நுட்பம் மூலம் கல்வி பயில்வதை மிகவும் பயனுள்ள தாகவும் எளிமையானதாகவும் ஆக்குவதற்கு இத்தகைய டேப்லெட் கம்ப்யூட்டர்கள் உதவிகர மாக இருக்கும் என்று மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் அருண் ராஜாமணி தெரிவித்தார்.
ஆம்னி 10 டேப்லெட், ஹெச்பி, பியர்சன் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் இணைந்து கூட்டாக அளித்துள்ள மேம்பட்ட தயாரிப்பாகும். ஹெச்பி ஆம்னி 10 டேப்லெட் அனைத்து நிர்வாகவியல் மையங்களிலும் கிடைக்கும். மாணவர்களுக்கு சுலபத் தவணையாக ரூ. 2,990 வீதம் 12 மாதம் செலுத்தும் வசதி யோடு இது வந்துள்ளது. இந்த சிறப்புச் சலுகை ஜூன் 15 வரை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.