கச்சா எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு: சர்வதேச எரிபொருள் முகமை அறிவிப்பு

கச்சா எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு: சர்வதேச எரிபொருள் முகமை அறிவிப்பு
Updated on
1 min read

கச்சா எண்ணெய் விலை சரிவு 2015-ம் ஆண்டின் முதல் அரையாண்டு வரை தொடரும் என்று சர்வதேச எரிபொருள் முகமை (ஐஇஏ) தெரிவித்துள்ளது.

2015-ம் ஆண்டு முதல் பாதி வரை தேவை குறைவா கவும், அதன் பிறகே தேவை அதிகரிக்கும் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான லிபியாவில் உற்பத்தி பாதிப் படையாத பட்சத்தில் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்றும் ஐஇஏ தெரிவித்துள்ளது.

பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஜூன் மாதத் திலிருந்து 30 சதவீதம் வரை குறைந்திருக்கிறது.

2015-ம் ஆண்டுக்கான தேவை ஒரு நாளுக்கு 9.36 கோடி பேரலாக இருக்கும் என்றும் ஐஇஏ கணித்திருக்கிறது.

இது தற்போதைய தேவையை விட 1.2 சதவீதம் மட்டுமே அதிகம். மேலும் எண்ணெய் விலை உயர்ந்ததற்கு உற்பத்தியும் ஒரு காரணமாகும். அக்டோபரில் ஒரு நாளைக்கு 35,000 பேரல் கச்சா எண்ணெய் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 77.74 டாலராக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in