Published : 10 Nov 2014 09:23 AM
Last Updated : 10 Nov 2014 09:23 AM

15 மின்னணு கருவிகளுக்கு தரக் கட்டுப்பாடு: அரசு அறிவிப்பு

செல்போன் உள்ளிட்ட 15 மின்னணு கருவிகளுக்கான கட்டுப்பாட்டை அரசு வெளியிட்டுள்ளது. அரசு நிர்ணயித்த தரத்தை பூர்த்தி செய்யாத சாதனங்கள் தடை செய்யப்படும். தரம் குறைந்த பொருள்கள் வரத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த தரக் கட்டுப்பாட்டை அரசு வெளியிட்டுள்ளது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள இந்த தரக்கட்டுபாடு நவம்பர் 7-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன், பவர் பேங்க், எல்இடி விளக்குகள், உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் அரசு நிர்ணயித்த தரத்தை 6 மாதத்துக்குள் எட்ட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.. தரம் குறைந்த பொருள்களைத் தடுப்பதோடு பொதுமக்களின் பாதுகாப்பை கருதி இத்தகைய தரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x