சூரிய மின் உற்பத்தி நிலையம்: தமிழகம் ஆர்வம்- மக்களவையில் அமைச்சர் தகவல்

சூரிய மின் உற்பத்தி நிலையம்: தமிழகம் ஆர்வம்- மக்களவையில் அமைச்சர் தகவல்
Updated on
1 min read

சூரிய மின்னுற்பத்தி பூங்காக்கள் அமைக்க தமிழகம் உள்பட 12 மாநிலங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன. ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அளவில் 22 பூங்காக்கள் அமைக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிகபட்சமாக 7,500 மெகாவாட் மின் உற்பத்தி பூங்கா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லே மற்றும் லடாக் பகுதியில் அமைய உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மக்களவையில் வியாழக் கிழமை மத்திய மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க மரபுசாரா எரிசக்தித்துறை இணையமைச்சர் பியூஷ் கோயல் எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியதாவது: குஜராத், மத்தியப்பிரதேசம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், மேகாலயம், பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள் அமைக்க ஆர்வம் தெரிவித்துள்ள மாநிலங்கள் என்று குறிப்பிட்டார்.

ஐந்து ஆண்டுகளில் 25 சூரிய மின் உற்பத்தி பூங்காக்களை அமைக்க தமது அமைச்சகம் திட்டமிட்டுள்ளாக அவர் கூறினார்.

கிராமப்பகுதிகளில் மின் வசதி ஏற்படுத்தித் தருவது தொடர் பாக ஜம்மு காஷ்மீரில் 299 கிராமங்களுக்கும், ஒடிசாவில் 296 கிராமங்களுக்கும் கோரிக்கை வந்துள்ளதாகவும் இவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்ட தாகவும் அவர் தெரிவித்தார். கிராமங்களுக்கு மின் வசதி ஏற்படுத்துவதற்காக ஜம்மு காஷ்மீருக்கு ரூ. 20.09 கோடியும், ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 28.59 கோடியும் அளிக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறினார்.

நிலக்கரி ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது தொடர் பான மசோதாவை மீண்டும் தாக்கல் செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார். நிலக்கரி ஒழுங்குமுறை ஆணைய மசோதா 2013-ம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மே மாதம் முந்தைய அரசின் பதவிக்காலம் முடிந்ததால் இந்த மசோதா நிறைவேறவில்லை. எனவே இதை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசு ஆராய்ந்து வருவ தாக அவர் குறிப்பிட்டார்.

31 சதவீத நெடுஞ்சாலை பணிகள் பூர்த்தி

இந்த ஆண்டு போட திட்டமிட் டிருந்த 6,300 கி.மீ. தூர நெடுஞ் சாலை திட்டப் பணியில் 31 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

மக்களவையில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் நடப்பு ஆண்டில் (2014-15) பல்வேறு திட்டங்களின் மூலம் 6,300 கி.மீ. தூர நெடுஞ்சாலை போட திட்டமிடப்பட்டிருந்தது. அக்டோபர் மாத இறுதியில் மொத்தம் 1,984 கி.மீ. தூரத்துக்குத்தான் சாலைகள் போடப்பட்டுள்ளன. இதற்கான செலவு மதிப்பு ரூ. 13,245 கோடியாகும். மொத்த ஒதுக்கீடு ரூ. 33,220 கோடி என்றும் அவர் கூறினார்.

நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் காரணமாக சாலை போடும் பணிகளில் தேக்க நிலை நீடிப்பதாக அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in